பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜன., 2015

ஐ.தே.கட்சி தலைமையக முற்றுகை! மங்கள சமரவீரவை கைது செய்யும் முயற்சியா?


நீதிமன்ற உத்தரவை பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தை பொலிஸ் படையுடன் முற்றுகையிட முயற்சித்த புலனாய்வுப் பிரிவினர் பெரும்
எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் சுற்றி வளைத்து கேள்வி எழுப்பியமை மற்றும் மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக தலைமையகத்திற்குள் பிரவேசிக்க முடியாது திரும்பிச் சென்றுள்ளனர்.
தேர்தல் ஒன்று நடைபெற உள்ள சந்தர்ப்பத்தில் புலனாய்வு பிரிவினர் அரசியல் கட்சி ஒன்றின் தலைமையகத்தை முற்றுகையிட முயற்சித்தமை இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
குடும்ப மரம் என்ற புத்தகம் ஒன்று அச்சிடப்பட்டமை தொடர்பாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தை சோதனையிட முயன்றதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், குடும்ப மரம் புத்தகத்தை ஆக்கிய மங்கள சமரவீரவை எப்படியாவது கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் டி.ஆர். எல். ரணவீரவுக்கு நேரடியாக உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் 8 தேடுதல் அனுமதிகளை நீதிமன்றத்திடம் இருந்து பெற்றுக்கொண்டிருந்தார்.
கோட்டை நீதவான் திலின கமகே இந்த தேடுதல் அனுமதியை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நீதவானுக்கு ராஜபக்ஷ குடும்பத்திருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.