பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2015

ஊர்காவற்துறையில் வாக்காளர்களை அச்சுறுத்திய அரச ஆதரவாளர்கள்


ஊர்காவற்துறை பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு வாக்களிக்கச் சென்றவர்களை இனம் தெரியாத நபர்கள் சிலர்
அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் அரசின் ஆதரவாளர்கள் சிலர் வாக்களிப்பு நிலையங்களுக்கு 5௦௦ மீற்றர் தூரத்தில் நின்றுகொண்டு வாக்களிக்கச் சென்றவர்களிடம் மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறும் இல்லாது போகின் நீங்கள் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்கவேண்டி வருமெனவும் அச்சுறுத்தியுள்ளதால் இதனால் வாக்காளர்கள் சிலர் வாக்களிக்காது திரும்பிச்சென்றுள்ளனர்.

இதேவேளை வடக்கு மாகாணத்தில் 24 முறைப்பாடுகளும், கொழும்பில் 53 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.