பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2015

அருள்நிதி திருமண நிச்சயதார்த்தம் : கோபாலபுரத்தில் கூடிய கலைஞர் குடும்பம்



திமுக தலைவர் கலைஞரின் மகன் தமிழரசுவின் மகன் நடிகர் அருள்நிதிக்கு இன்று திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.    நட்சத்திர ஓட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்துள்ளது.   தயாளு அம்மாள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் இருப்பதால் கோபாலபுரம் இல்லத்திலேயே இந்த நிச்சயத்தார்த்தம் இன்று மாலை 5 மணிக்கு துவங்கி இரவு 7 மணிக்கு முடிவடைந்தது.

கலைஞர், தயாளு அம்மாள், ராஜாத்திஅம்மாள், தமிழரசு, துர்க்கா ஸ்டாலின், காந்தி அழகிரி,  கனிமொழி என்று கலைஞர் குடும்பத்தினர் அனைவரும் கோபாலபுரம் இல்லத்தில் கூடினர்.  மு.க.ஸ்டாலின் வெளியூரில் இருப்பதால் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை.    மு.க.அழகி இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

 சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் மகளை மணந்துகொள்கிறார் அருள்நிதி.