பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2015

மிழ் மக்களிடம் நான் கடன்பட்டுள்ளேன்; புதிய ஜனாதிபதி!

தமிழ் மக்களிடம் நான் கடமைப்பட்டுள்ளேன் அவர்களின் பிரச்சினைகள் எனக்கு நன்கு தெரியும் அவற்றைக் கொள்கை ரீதியில்
தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
அதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தமிழ்தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு , கிழக்கு மக்கள் தங்களுடைய வாக்குகளை இட்டு என்னை ஜனாதிபதியாக்கியுள்ளனர். நான் அவர்களிடம் கடன்பட்டுள்ளேன். அதற்கான நன்றிக்கடனை நான் தீர்க்க வேண்டும்.
இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன். அதனை கொள்கை ரீதியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
இன்றைய சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினரும் செயலாளருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.