பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜன., 2015

மகிந்தவின் கொள்கலன்களுக்கு சீல்

ஜனாதிபதி தேர்தலின் போது பகிர்ந்தளிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் தேநீர்க் கோப்பைகள்,  பீங்கான்கள், கணினிகள், முன்னாள் ஜனாதிபதியின்
புகைப்படம் பொறிக்கப்பட்ட பீங்கான்கள், சிவப்பு நிற சால்வையுடன் கூடிய டி-சேர்ட்கள் அடங்கிய மூன்று கொள்கலன்களை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்திலிருந்து மீட்ட பொலிஸார் அவற்றுக்கு சீல் வைத்துள்ளனர்.
 
கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி, தங்கொட்டுவையில் அமைந்துள்ள போசிலன் நிறுவனத்திடமிருந்து இந்த மூன்று கொள்கலன்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ள  நிலையிலும் அதற்கான உரிமையாளர்கள் என்று இதுவரையில் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.