பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜன., 2015

வானில் மிதந்த அதிசய பட்டங்கள்



 வடமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி  நடைபெற்று வருவது வழமை. 

 
தைப்பொங்கல் தினமான நேற்றும் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மாபெரும் பட்டம் விடும் போட்டி
நடைபெற்றது. இந்தப் போட்டியில் கண்ணைக் கவரும் வகையில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்க
விடப்பட்டன. 
 
இந்தப் பட்டம் விடும் போட்டியைக் காண்பதற்காக பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர். நடுவர்களால் தெரிவு செய்யப்பட்ட பட்டங்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கப்பட்டன.