பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2015

பிலியந்தலவில் பிடிப்பட்ட ரேஷிங் காரில் முன்னாள் ஜனாதிபதியின் வாகன இலக்கம்!


பிலியந்தல பிரதேசத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஆடம்பர ரேஷிங் கார் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் அந்த வாகனத்தின் இலக்கம் முன்னாள் ஜனாதிபதியின் வாகனங்களின் ஒன்றின் இலக்கம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ரேஷிங் காரின் பெறுமதி 800 லட்சம் ரூபா என தெரியவந்துள்ளது. பதிவு செய்யாத வாகனத்தை தம்வசம் வைத்திருப்பதும் வேறு வாகனத்தின் இலக்கத்தை அந்த வாகனத்தில் பொருத்தி பயன்படுத்துவதும் பாரதூரமான குற்றச் செயல் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த ரேஷிங் கார் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷ பயன்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.