பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2015

ரூபவாஹினி, ஐடிஎன் தொலைக்காட்சி பணிப்பாளர்களுக்கு நீதிவான் உத்தரவு


காணொளி ஒன்றை ஒளிபரப்பியமை தொடர்பில் ஐடிஎன் மற்றும் ரூபவாஹினி ஆகியவற்றின் பணிப்பாளர்களுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் போட்டியிட்ட போது தமது தாயை சிறைப்படுத்தியதாக கூறி சிறுவன் ஒருவரின் காணொளியை ஒளிபரப்பியமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த சிறுவன் தொடர்பில் காணொளியை கையளித்த சிறுவனின் தந்தை என்று கூறப்படுபவரின் பெயரை வெளியிடுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்த காணொளி தேர்தல் பிரசாரமாக ஒளிபரப்பப்பட்டது.
தமது தாய் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறித்த சிறுவன் கூறும் வகையில் அந்த காணொளி தயாரிக்கப்பட்டிருந்தது.
தமக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தாய் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறித்த சிறுவன் காணொளியில் தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த காணொளிக்காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த சிறுவனின் தாயார், பொலிஸாருக்கு முறையிட்டார்.
தமது மகனை தமது கணவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் அழைத்துச் சென்றதாகவும் பின்னர் தொலைக்காட்சியிலேயே மகனை கண்டதாகவும் குறித்த தாய் தமது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்தே இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.