பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2015

கே.பி. தொடர்பாக நாளை விசாரணை

புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான குமரன் பத்மநாதன் அல்லது கே.பி. யை கைது செய்து விசாரணை செய்யுமாறு ஜே.வி.பி. தாக்கல் செய்திருந்த  அழைப்பாணை மனு  நாளை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கின்றது. 
கடந்த திங்கட்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.  கே.பி. யை கைது செய்து விசாரணை நடத்துமாறும் கோரப்பட்டது. தற்போது இராணுவ பாதுகாப்பின் கீழ் கே.பி. அரச சார்பற்ற தொண்டர் நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.  பயங்கரவாத தடைச்  சட்டத்தின் கீழ்  கே.பி.யை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்திடம்  ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் கூறியிருந்தார்.