பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2015

மகிந்தவின் மகன் யோசித கடற்படையில் சேர்ந்தது எப்படி?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளரிடம் இன்று திங்கட்கிழமை முறைப்பாடொன்றை முன்வைப்பதற்கு ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது.
 யோசித ராஜபக்ஷ கடற்படையில் எவ்வாறு இணைந்து கொண்டார்? இங்கிலாந்திலுள்ள கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்காக அவருக்கு எவ்வாறு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது? அரச ஊழியராக பணியாற்றிக் கொண்டு எவ்வாறு  நிறுவனமொன்றை  நடத்திச் சென்றார் என்பன தொடர்பாக இந்த முறைப்பாடுகள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஜே.வி.பி.யின் மேல் மாகாண சபை உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான குழுவினரால் இந்த முறைப்பாடுகள் இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளன.