பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜன., 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை : வைகோ




தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார். மதுரை ஐகோர்ட் கிளையில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராகி வாதாடினார்.

பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’ ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது.   மேலும்,  இந்த தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்க போவதில்லை’’ என்று தெரிவித்தார்.