பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜன., 2015

கிளிநொச்சியில் வாகன விபத்து! வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை படுகாயம்


வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை இன்று விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்திலே அவர் படுகாயமடைந்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக திரும்பியபோது பின்னே வந்த வாகனம் அவர் மீது மோதியதிலேயே படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த அவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.