பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2015

எதற்கும் கவலைப்படவில்லை மூன்று மாதங்களில் மீண்டும் மகிந்த யுகம் ; நிஷாந்த


news
பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து கைதிகள் மூவரை பாலத்காரமாக அழைத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம மீதான வழக்கு பெப்ரவரி 23 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரப்புரைக்கூட்டத்திற்கு அமைக்கப்பட்ட மேடை தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து பாலத்காரமாக அழைத்துச் சென்றிருந்தார்.

அதனையடுத்து இவர்மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு  சந்தேகநபரான நிஷாந்த முத்துஹெட்டிகம நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது விசாரணை அறிக்கையை சமர்பிக்க பொலிஸார் தவறியுள்ளனர். அதனால் வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக பத்தேகம நீதவான் சந்திம எதிரிமான்ன உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையின் பின் நீதிமன்றில் இருந்து வெளியில் வந்த நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவிக்கையில்,

செய்யாத குற்றத்திற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீதிமன்றில் நியாயம் கிடைக்கும் என நம்புகின்றேன். எதற்கும் கவலைப்படவில்லை இன்னும் மூன்று மாதங்களில் மீண்டும் மகிந்த யுகம் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.