பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2015

அமைச்சரைக் கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

news























 ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமானை உடனடியாக கைது செய்யுமாறு கோரி பதுளை, நியூபேர்க் தோட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. 
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைச்சர் செந்தில் தொண்டமான்,  பெரியசாமி ஞானசேகரன் என்ற தபால்காரரை கடந்த 3 ஆம் திகதி தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 
குறித்த தபால்காரர் பசறை-எல்ல வீதியிலுள்ள நீர்போட் தோட்டத்தில் வாக்காளர் அட்டைகளை விநியோகித்துக் திரும்பிகொண்டிருந்தபோதே தாக்குதலுக்கு உள்ளானார். இந்த சம்பவம் தொடர்பில், தபாற்காரர் எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அந்த முறைப்பாட்டில் தான் விநியோகிப்பதற்கு வைத்திருந்த 35 வாக்காளர் அட்டைகள் மற்றும' கையடக்கதொலைபேசியைக் காணவில்லை என்றும் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
 
இதேவேளை, செந்தில் தொண்டமானுக்கு எதிராக பண்டாரவளை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.