பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2015

வாக்களிப்பை தடுக்க இராணுவம் முயற்சி; சர்வதேச மன்னிப்புச் சபை


மக்களின் உரிமையை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய
பிராந்திய பிரதி இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீது தாக்குதல், வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது.
 
மக்களின் பாதுகாப்பு, சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் போதே அவர்கள் அச்சமின்றி வாக்களிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
தேர்தல் தினத்தன்று வாக்களிப்பை தடுப்பதற்காக அரசு இராணுவத்தைக் கொண்டு அடக்குமுறையில் ஈடுபடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கவலை அளிக்கிறது
 
எனவே நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களின் அரசியல் பங்குபற்றுல் உரிமையை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.