பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2015

ஈ.பி.டி.பி தவநாதன் தேர்தல் பிரச்சாரத்தில்: தேர்தல் திணைக்களம் தூங்குகின்றதா?

வடக்கச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஈ.பி.டி.பியின் வட மாகாண உறுப்பினர் தவநாதன் இன்று காலை மக்களுக்கு பணம் கொடுத்து
பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தேர்தல் திணைக்கள சட்டத்தை மீறி மகிந்த ராஜபக்கசவுக்காக இன்று காலையிலும் வட்டக்கச்சி சந்தை மற்றும் சமுர்த்தி சங்கம் போன்றவற்றில் அரசோடு சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பியின் வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன் வெள்ளைநிற NP.PC.1089 இலக்கமுடைய பிக்கப் வாகனத்தில் சென்று மக்களுக்கு பணம் கொடுத்து பிரச்சாரத்தில் தற்பொழுது ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் திணைக்களம் தூங்குகின்றதா என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.