பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜன., 2015

உயிருக்கு போராடும் ரசிகையின் ஆசையை நிறைவேற்றினார் நடிகர் விஜய்


சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜ புரத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா. வயது25. இவரை மோசமான நோய் தாக்கியது. தீவிர சிகிச்சை அளித்தும் பயன் இல்லை. டாக்டர்களும் கைவிட்டனர். பல லட்சம் பேரில் ஒருவர் மட்டுமே குறிப்பிட்ட இந்த நோயால் பாதிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

அர்ச்சனாவால் பேச முடியவில்லை, நடக்கவும் இயலாது. வீட்டில் வைத்து பெற்றோர் அவரை கவனித்து வருகின்றனர். அர்ச்சனா நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை. விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்று தனக்கு ஆசையாக உள்ளது என்று பெற்றோரிடம் தெரிவித்தார். மகள் ஆசையை நிறைவேற்ற அவர்களும் முயற்சித்தனர். 

இதுபற்றிய தகவல் விஜய் கவனத்துக்கு சென்றது. உடனடியாக அர்ச்சனாவை அவரது பிறந்த நாளில் நேரில் சந்தித்தார். கைகளை பற்றிக் கொண்டு அன்பாக பேசி மகிழ்ந்தார். உடல்நிலை பற்றியும் கேட்டு அறிந்தார். விஜய்யை நேரில் பார்த்ததும் அர்ச்சனா மிகவும் சந்தோஷமானார். முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது.

அர்ச்சனாவால் நிற்க முடியாது என்பதால் அவரை விஜய்யே தூக்கி நாற்காலியில் உட்கார வைத்தார். அவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார். பின்னர் பெற்றோரிடம் அர்ச்சனாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு விடை பெற்று சென்றார்.