பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜன., 2015

ஆழ ஊடுருவும் ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் ஊடுருவவில்லை: அரசாங்கம்

ஆழ ஊடுருவித் தாக்கும் ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது
.
ஆழ ஊடுருவித் தாக்கும் படைப் பிரிவைச் சேர்ந்த எட்டு ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த தகவல்கள் பொய்யானது என பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது. எந்தவொரு ஜெர்மனிய படைவீரரும் இலங்கைக்கு வரவில்லை.
ஜெர்மன் தூதரகமும் இதனை உறுதி செய்துள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த பொய்யான தகவல்களை முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரே மேற்கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகள் கூட இவ்வாறு போலிப் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.
மக்களை பிழையாக வழிநடத்தும் ஓர் முயற்சியாகவே இதனைக் கருத வேண்டும் என பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ளது.
முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர், ஜெர்மனியின் ஆழ ஊடுருவித் தாக்கும் பிரிவின் உறுப்பினர்கள் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக குற்றம் சுமத்திள்ளார் தெரிவித்துள்ளது.