பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜன., 2015

குவைத்தில் திருமாவளவனுக்கு ‘நல்லிணக்க நட்சத்திரம்’ விருது


குவைத் தமிழ் இசுலாமிய சங்கத்தின் ஐம்பெரும் விழா அச்சங்கத்தின் தலைவர் முகமது மீராசா அவர்கனிள் தலைமையில் ஜனவரி 1 அன்று குவைத்தில் உள்ள ஃகைத்தான் பள்ளிவாசலில் தொடங்கியது.

 ஜனவரி 2 அன்று அதே பள்ளிவாசலில் இரண்டாம் நாள் நிகழ்வு நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமாத் தலைவர் அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், அப்துல் காதிர் பாகவி, ஆளுர் சாநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்கள்.

அவ்விழாவில் குவைத் தமிழ் இசுலாமிய சங்கத்தின் சார்பில் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ‘நல்லிணக்க நட்சத்திரம்’ எனும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

அவ்விழாவில் சங்கத்தின் 10ம் ஆண்டு சிறப்பு மலரை தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட அதனை ‘வாழ்நாள் சமூக சேவையாளர்’ விருதினை பெற்றுக்கொண்ட டெல்லி பாஷா அவர்கள் பெற்றுக் கொண்டார்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் அடங்கிய அட்டவணையும் இவ்விழாவில் வெளியிடப்பட்டது.