பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜன., 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்! தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!



டெல்லி சட்டமன்றத் தேர்தலோடு ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை இம்மாதத்திலேயே வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி கடைசி வாரத்தில் தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் அங்கு மீண்டும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதற்கான அறிவிப்பை இன்னும் சில தினங்களில் வெளியிடவும், வாக்குப்பதிவை பிப்ரவரி கடைசி வாரத்தில் நடத்திடவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெள்ளிக்கிழமை டெல்லி சென்றார். அங்கு அவர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்தை சந்தித்து பேசினார். தமிழகத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியலை வெளியிடுவது பற்றியும், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்தும் கேட்டறிந்தார். 

இதையடுத்து, டெல்லி சட்டமன்றத் தேர்தலோடு ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.