பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2015

விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலி


தைவான் நாட்டில் பயணிகள் விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

தைவான் நாட்டின் தைபே நகரில் இருந்து 58 பேருடன் புறப்பட்ட விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.