பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2015

வீரவன்ஸவின் மனைவி கைது செய்யப்பட உள்ளார் – பொலிஸ் வட்டாரங்கள்

போலி ஆவணங்களை கொண்டு பிறப்புச் சான்றிதழை தயாரித்து கடவுச்சீட்டை பெற்றார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவியான ஷசி வீரவன்ஸ கைது செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.
சஷி வீரவன்ஸவை குற்றப்புலனாய்வு திணைக்களம் அடுத்த சில தினங்களில் கைது செய்ய உள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த குற்றச்சாட்டு குறித்து நடத்திய விசாரணைகளில் பல தகவல்களும் பல சாட்சியங்களும் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் சிறப்புரிமைகளை பயன்படுத்தி இந்த போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு உதவிய ஏனைய நபர்களுக்கு எதிராகவும் சட்டத்தை செயற்படுத்த உள்ளதாகவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.