பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2015

பிருத்வி - 2 : ஏவுகணை சோதனை வெற்றி



ஒடிசா மாநிலம், சந்திப்பூருக்கு அருகில், பிருத்வி -2 ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி -2 ஏவுகணை, 500 -1000 கிலோ எடையுள்ள அணுஆயுதங்கள், வெடிபொருள்களைச் சுமந்து, 350 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள தரை இலக்குகளை தாக்கும் திறன் படைத்தது.

இது குறித்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைந்த ஆய்வு மைய இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் கூறுகையில், "காலை 9.20 மணிக்கு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது' என்றார்.

2003 -ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்த ஏவுகணையை பயிற்சிக்காக அவ்வப்போது சோதனைச் செய்வது வழக்கம். அதன் ஒருபகுதியாகவே இன்று இந்த சோதனை மேற்கொள் ளப்பட்டது.