பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2015

அப்பாவி மக்களை கொன்று உடல் உறுப்புகளை விற்று நிதி திரட்டும் தீவிரவாதிகள்



ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற நாட்டை உருவாக்கி உள்ளனர். அங்கு வசிக்கும் மாற்று மதத்தினரையும், ஷியா முஸ்லிம்களையும் கொடூரமாக கொன்று குவித்து வருகிறார்கள்.

அவர்கள், தங்கள் இயக்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக அப்பாவி மக்களை கொன்று அவர்களின் கிட்னி போன்ற உள்உறுப்புகளை திருடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகலை ஐக்கிய நாட்டு சபைக்கான ஈராக் தூதர் நிக்கோலாய் மல்தனோவ் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட உடல்களை சேகரித்து பரிசோதனை செய்தபோது உடலில் இருந்த கிட்னி மற்றும் உடல் உறுப்புகள் காணாமல் போய் இருந்தன. இவற்றை விற்று ஐ.எஸ். தீவிரவாதிகள் பணம் திரட்டுவதாக தூதர் கூறினார்.

ஐ.எஸ். தீவிரவாதிகள் மொசூல் நகரை கைப்பற்றும் போது அங்கு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றிய ஏராளமான டாக்டர்களை கடத்தி சென்றனர். அவர்களை வைத்து மனித உறுப்புகளை அறுவை செய்து எடுப்பதாக தெரிகிறது. சுதாகரன் - இளவரசியின் இறுதி வாதம் 5 -வது நாளாக நடைபெற்று வருகிறது.