பக்கங்கள்

பக்கங்கள்

24 பிப்., 2015

வடக்கு அவை 2 மணி நேரத்துக்கு ஒத்திவைப்பு

யாழ். பல்கலைக்கழக சமூகம்  மற்றும்  பொது ஜன அமைப்புக்கள் இணைந்து நடாத்தும்  மாபெரும்  கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு
ஆதரவு தெரிவிக்கும்  வகையிலே வடக்கு மாகாண சபை 2 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 25 ஆவது அமர்வு இன்று நடைபெறும் நிலையில் ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் பேரணியும் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.

 சபை அமர்வு காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.  சபையில்   உறுப்பினர் ரவிகரன்   குறித்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும்  வகையில் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வந்தார் .

அதனடிப்படையில் ஏகமனதாக பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டு சபை 2 மணித்தியாலங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  எவரும்  போராட்டத்தில்  பங்கு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.