பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2015

தமிழீழ அகதிகளை கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக் கூடாது: ஈ.வி.கே.எஸ்.



தமிழகத்தில் உள்ள தமிழீழ அகதிகள் அவர்களாக விருப்பப்பட்டால் மட்டுமே இலங்கை அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழீழ அகதிகளை அரசு கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்பக் கூடாது. அவர்களாக விரும்பினால் இலங்கை செல்லலாம்.

இலங்கை அகதிகள் இந்தியாவிலேயே தங்கியிருக்க விரும்பினால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.