பக்கங்கள்

பக்கங்கள்

4 பிப்., 2015

யாழ்.கைத்தடி நுணாவில் இல்ல விளையாட்டுப் போட்டி


யாழ்ப்பாணம் கைத்தடி நுணாவில் அ.த.க.பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலை முதல்வர் ஆ.தங்கவேலு தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன், சிறப்பு விருந்தினராக, கோட்டக் கல்விப் பணிப்பாளர் கு.சிவானந்தம், கௌரவ விருந்தினராக பழைய மாணவர் செ.தவரத்தினம், கைத்தடி நுணாவில் கிராம அலுவலர் கானமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறப்பு வருகையாக பா.உறுப்பினர் சி.சிறீதரனும் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்திருந்தனர்.
இதில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் சயந்தன் கருத்துரைக்கையில்,
இக்காலமும் மாணவர்களின் ஆளுமைகளை இனங்காணும் காலம்தான்.
பாடசாலைகளில் பல்வேறு துறைகளில் மாணவர்கள் காட்டும் ஆர்வம் அவர்களை முழுமை அடையச்செய்யும் என்பதுடன் கூட்டுணர்வில் இருக்கக்கூடிய அனுபவத்தை உணரச்செய்யும்.
அந்த அனுபவம் எதிர்காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தச்சமுகத்துடன் நெருங்கிய வாழக்கையை வாழ நிச்சயமாக உதவும். ஆரோக்கியமான ஒரு சமுதாயத்திற்கு பள்ளிகளின்.
இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் என்றும் பலம் சேர்க்கின்றன என தெரிவித்தார்.