பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2015

பிரபல மணல் குவாரி அதிபர் படிக்காசு கைது!


முறைகேடாக கிராவல் மண் அள்ளியதாக பதிவு செய்யப்பட்ட புகாரில், பிரபல மணல் குவாரி அதிபர் படிக்காசு கைது செய்யப்பட்டார். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகளை நடத்தி வருபவர் படிக்காசு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த இவர் மீது, முறைகேடாக கிராவல் மண் அள்ளியதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, படிக்காசை கைது செய்ய டி.எஸ்.பி. பஞ்சாட்சரம் தலைமையில் தனிப்படை அமைத்தது. 

இந்தநிலையில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் இருந்த படிக்காசை தனிப்படை போலீசார் கைது செய்தனர். படிக்காசுடன் நாகூர் அனீபா, சோலை ராஜா, மோகன், ஜெயராமன் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். 

கிராவல் மணல், கிரானைட் ஆகிய கனிம வளங்களை முறைகேடாக வெட்டி எடுத்ததால், சுமார் 220 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக படிக்காசு உள்ளிட்ட கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.