பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2015

நான்கு இலங்கையர்களை திருப்பி அனுப்பிய அவுஸ்திரேலியா


சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற நான்கு இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் தி
ருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி அவுஸ்திரேலிய கோகஸ் தீவு கடற்பரப்பில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்ட இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இலங்கைக்கு திருப்பு அனுப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் பீட்டர் டுடோன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்தே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் பீட்டர் டுடோன் குறிப்பிட்டுள்ளார்.