பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2015

நிதாஹஸ் பெரமுன என்ற பெயரில் நீலப்படையணி


நீலப்படையணி (நில்பலகாய) என்ற பெயரில் செயற்பட்டு வந்த தமது அமைப்பு தற்போது நிதாஹஸ் தருன பெரமுன என்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த படையணிக்கு தலைவராக முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச செயலாற்றி வந்தார்.
எனினும் பெயர் மாற்றப்பட்ட புதிய அணியில் அவர் எவ்வித பொறுப்புக்களையும் வகிக்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இந்த அமைப்பின் தலைவராக செயற்படவுள்ளார்.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் பிரசன்ன வீரவர்த்தன செயலாளராக கடமையாற்றவுள்ளார்.