பக்கங்கள்

பக்கங்கள்

2 பிப்., 2015

தமிழ் மக்கள் வாழுவதற்கான சூழல் மாறி வருகிறது; வேலாயுரம் தயாநிதி

திமுக தலைவர் கலைஞரை, ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை அமைச்சர் வேலாயுதம் தயாநிதி சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலாயுதம் தயாநிதி, இலங்கையில் அமைந்த புதிய அரசு மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த அரசு அமைவதில் தமிழ் மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளார்கள். 

ஈழத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணை வலுப்படுத்தப்படும். இங்கே உள்ள இலங்கை தமிழ் மக்கள் தங்களுடைய சொந்த மண்ணில் குடியேற ஆசைப்பட்டால், அவர்களுக்கு இலங்கை அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும். அதே நேரத்தில் யாரையும் இலங்கை திரும்புமாறு கட்டாயப்படுத்துவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. தமிழ் மக்கள் வாழுவதற்கான சூழல் மாறி வருகிறது என்றார்.