பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2015

ஆப்கானை வெற்றி கொண்டது பங்களாதேஷ்

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி 105 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில், 11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் இடம்பெற்று வருகின்றது.
அவுஸ்திரேலியாவின் கென்பெரா  நகரில் இன்று பகலிரவுப் போட்டியாக  நடைபெற்ற ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி, ஆப்கானிஸ்தான் அணியை சந்தித்தது. 

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி  முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி  நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷ் அணி சார்பாக முஷ்பிகுர் ரஹிம் 71 ஓட்டங்களையும் ஷகிப் அல் ஹசன் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் ஹமீத் ஹசன், ஷபுர் ஷடரன், அஃப்தாப் ஆலம், மிர்வைஸ் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் 268 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப்பெற்று 105 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான்  அணி சார்பாக சமியுல்லாஹ் ஷன்வரி 42 ஓட்டங்களையும் மொஹமட் நபி 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய மொட்டர்ஸா 3 விக்கெட்டுகளையும்  சஹிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும்  கைப்பற்றினர்.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியின் முஸ்பிகுர் ரஹிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, 105 ஓட்டங்களால் வெற்றி பெற்ற பங்களாதேஷ்  அணி  குழு “ஏ” யில் புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது  இடத்திலுள்ளது.
இது வரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் குழு “ ஏ ” யில் நியூசிலாந்து அணி 4 புள்ளிகளுடன் முதலாமிடத்திலும் அவுஸ்திரேலிய அணி 2 புள்ளகளுடன் 2 ஆம் இடத்திலும்  பங்களாதேஷ் அணி 2 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலுமுள்ளமை குறிப்பிடத்தக்கது.