பக்கங்கள்

பக்கங்கள்

3 பிப்., 2015

இலங்கை தொடர்பான விசாரணைகளில் ஐ.நா. எந்தத் தளர்வையும் காட்டக்கூடாது:சுரேஸ் பிரேமச்சந்திரன

இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணைகளில் எந்தத் தளர்வுகளையும் காட்டக்கூடாது என அமெரிக்காவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தும் என அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இரு நாள் பயணமாக நாளை திங்கட்கிழமை இலங்கை வரும், அமெரிக்காவின் தெற்கு, மத்திய கிழக்கு ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலர் நிஸா தேசாய் பிஸ்வாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசுவர்.
இதன்போது கூட்டமைப்பினர், அமெரிக்காவிடம் நான்கு முக்கிய விடயங்கள் குறித்து வலியுறுத்துவர். இவற்றில் முக்கியமாக இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைகளில் ஐ.நா. எந்தவிதமான தளர்வுகளையும் காட்டக்கூடாது.
இது தவிர அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரின் விடயம், வலி.வடக்கு, சம்பூர் பகுதிகளில் மக்களின் மீள் குடியேற்றம் என்பவை தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை இலங்கை எடுக்க அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு இந்த சந்திப்பின் போது கூட்டபப்பினர் நிஷாவிடம் வலியுறுத்துவர் என்றார் சுரேஸ் எம்.பி.   -