பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2015

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து



டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 7ஆம் தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடந்தது. காலை 10.15 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 59 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்தது. இதையடுத்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் தகுதியை ஆம் ஆத்மி கட்சி பெற்றது.

இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அக்கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளருமான அரவிந்த கெஜ்ரிவாலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி வெற்றியை தொடர்ந்து அரவிந்த கெஜ்ரிவாலுக்கு தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களை மோடி தெரிவித்தார்.