பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2015

டெல்லி சென்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


மத்தியில் பாஜக அரசு அமைந்தவுடன் திட்டக்குழுவை கலைத்துவிட்டு, அதற்கு மாறாக நீத்தி ஆயோக் எனப்படும் புதிய அமைப்பை ஏற்படுத்தப்பட்டது. 

இந்த அமைப்பிற்கான மாநில முதல் அமைச்சர்கள் கூட்டம், டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல் அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். 

இதில் பங்கேற்க தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை மாலை டெல்லி சென்றார். தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றனர்.