பக்கங்கள்

பக்கங்கள்

7 பிப்., 2015

மருத்துவமனையில் தா.பாண்டியன் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகே பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, கேரளா சென்றிருந்த தா.பாண்டியன், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி வந்துள்ளார். 

ரயிலில் வரும்போதே காய்ச்சல் அதிகமாக இருந்ததால், அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.