பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2015

பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய நிறைவேற்று பணிப்பாளர்


பனை அபிவிருத்திச் சபையின்  நிறைவேற்றுப் பணிப்பாளராக கே.விஜிந்தன் இன்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டார். 
 
ஆட்சி மாற்றத்தையடுத்து பனை அபிவிருத்திச் சபையின்  தலைவர் பதவி வெற்றிடமாகவுள்ள நிலையில் சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
பாரம்பரிய கைத்தொழில்கள்  மற்றும்  சிறுகைத்தொழில் அபிவிருத்தி மற்றும்  முயற்சி அமைச்சின்  கீழ் வந்த பனை அபிவிருத்திச் சபை இயங்கி வந்தது.
 
எனினும் ஜனாதிபதித் தேர்தலின் பின்  இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின்  படி  புதிய அமைச்சுத் தெரிவில் கைத்தொழில் மற்றும்  வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
அதற்கமைய பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வரும் நிலையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு என நிறைவேற்றுப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அதற்கமைய அவர் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மேலும் விஜிந்தன் இதற்கு முன்னர்  வடக்கு மாகாண ஆளுநரின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதேவேளை மிகவிரைவில் பனை அபிவிருத்திச் சபைக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.