பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2015

24 ஆவது லீக்கில் வென்றது தென் ஆப்பிரிக்கா

 அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலகக்கிண்ண தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய ஆட்டமானது கான்பெரோவில்
இன்று காலை 9மணிக்கு ஆரம்பமாகியது. இப்போட்டியில் ‘பி’ பிரிவில் ,தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
 
அதன் படி தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குயின்டன் 01 ஓட்டங்களை எடுத்து ஏமாற்றியநிலையில்.இதனை தொடர்ந்து களம் இறங்கிய ஆம்லா 159 , பிளெஸிஸ் 109, ஏபி டி வில்லியர்ஸ் 24, டேவிட் மில்லர் 46, ரூஸோ 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க தென் ஆப்பிரிக்க 441 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து அனைத்து ஓவர்களும் நிறைவு செய்த நிலையில்  நிலையில் 441 ஐ வெற்றி இலக்காக கொண்டு  பதிலுக்கு துடுப்பெடுத்துதாடிவரும் அயர்லாந்து அணி 45 ஓவர்கள் நிறைவில் சகல விக்கற்றுக்களையும் இழந்து 210 எடுத்துக்கொண்டது. 
 
இன்றைய 24 ஆவது லீக் போட்டியை  பொறுத்தவரை ஆரம்பத்திலேயே  தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெறும் என்பதை பார்வையாளர்கள் அனைவரும் அறிந்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.