பக்கங்கள்

பக்கங்கள்

7 மார்., 2015

தியாகுவிடம் ரூ.2 கோடி கேட்கிறார் கவிஞர் தாமரை!


தனது வாழ்க்கைக்காகவும், மகனின் எதிர்காலத்திற்காகவும் தியாகு ரூ.2 கோடி தர வேண்டும் என கவிஞர் தாமரை கூறியுள்ளார்.
பிரபல சினிமா பாடலாசிரியரும் பெண்ணியவாதியுமான தாமரை, தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி தனது மகனுடன் கடந்த 27ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை
தொடங்கினார்.
இந்நிலையில், 8ஆம் நாளான இன்று வள்ளுவர் கோட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''என் கணவர் தியாகு வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகி விட்டார். அவர் திரும்பி வர வேண்டும். மேலும், அவரைப் பற்றி தமிழ் ஆர்வலர்கள் தெரிந்து கொள்வதற்காகவே வீதிக்கு வந்த போராடுகிறேன்.

தியாகுதான் எனது வீட்டிற்கு வந்து பெண் பார்த்து, என்னை திருமணம் செய்து கொண்டார். இப்போது என்னை நிர்கதியாக விட்டுவிட்டு ஓடிவிட்டார். இதற்காக காவல்துறை, நீதிமன்றம் என செல்வதற்கு எனக்கு விருப்பமில்லை. விவாகரத்துக்கும் சம்மதிக்க மாட்டேன். என் மகனின் எதிர்காலத்திற்காகவும், என் வாழ்க்கைக்காகவும் தியாகு ரூ.2 கோடி தர வேண்டும்'' என்றார்.