பக்கங்கள்

பக்கங்கள்

7 மார்., 2015

ஜிகாதி கணவனின் பிடியில் சிக்கிய கர்ப்பிணி பெண் கதறல்


சுவிசை சேர்ந்த ஜிகாதி கணவனை தேடிச் சென்ற அவரது மனைவி பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ளார்.
சுவிசின் துர்கவ்(Thurgau)பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மனியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
வெவ்வேறு மதத்திலிருந்து இஸ்லாமிற்கு மாறிய இத்தம்பதியினர் சுவிசில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டில் இணையதளம் மூலமாக அந்த நபர், அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, ஜிகாதியாக மாற விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதன்பின் தனது கர்ப்பிணி மனைவியை விடுத்து, துருக்கி வழியாக சிரியாவிற்கு பறந்த அவர், அல்கொய்தா இயக்கத்தின் al-Nusra Front என்ற பிரிவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தன் கணவனை தேடி கடந்த அக்டோபர் மாதம் அப்பெண் சிரியாவிற்கு சென்றுள்ளார்.
ஆனால் தன் மனைவியை சிறைபிடித்த அந்நபர், தற்போது தாக்குதல்கள் அதிகம் நடக்கும் Idlib பகுதியில் அவரை பிணைக்கைதியாக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள அப்பெண் தன் பெற்றோருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, நாடு திரும்ப எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது. ஆனால் என்னுடைய கணவன் என்னை சிறைபிடித்துள்ளார்.
எனவே என்னை காப்பாற்ற நடவடிக்கைகளை எடுங்கள் என கண்ணீருடன் பேசியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சிகள் சுவிட்சர்லாந்த் மற்றும் ஜேர்மனியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் பரபரப்பாக ஒளிப்பரப்பின.