பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2015

கோவை சிறுமி பலாத்கார வழக்கில் அதிர்ச்சி தீர்ப்பு : 4 பேரும் விடுதலை



கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, தனது உறவினர் கோபாலகிருஷ்ணன் வீட்டில் தங்கி, படித்து வந்தார். தனியாக இருந்த சிறுமியை, கோபாலகிருஷ்ணன்( வயது 62,) இவரது நண்பர்கள், பாலசுந்தரம், (வயது 75),  ராகம் கருப்புசாமி( வயது46) , பாப்பம்பட்டி பிரிவு கருப்புசாமி(வயது 62), ஆகியோர், மயக்க ஊசி போட்டு, பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை, கோவை மகளிர் கோர்ட்டில்,நடந்து வந்தது. பரபரப்பான இந்த வழக்கில், 'மார்ச் 18 ம் தேதி தீர்ப்பளிக்கப்படும்' என நீதிபதி அறிவித்து இருந்தார். அதன்படி, நேற்று, குற்றம் சாட்டப்பட்ட நால்வரும், கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது, தீர்ப்பை, 20 ம் தேதிக்கு( இன்று ) தள்ளிவைப்பதாக, நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். 
 
அதன்படி இன்று  வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றவாளிகள் 4 பேரையும் விடுதலை செய்து உத்தர விட்டுள்ளார்.  குற்றவாளிகள் விடுதலை தீர்ப்பினால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.