பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2015

பிரபல ரவுடி வெள்ளைசெந்தில் துப்பாக்கிகளுடன் கைது



 நாகர்கோவிலை சேர்ந்த செந்தில் என்கிற வெள்ளை செந்தில் பிரபல ரவுடி . இவன் மீது சென்னை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் 5 கொலை வழக்கு , 7 கொலை முயற்சி வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. 

 பல முறை சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இவன், இன்று அதிகாலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது,  சந்தேகத்துக்கு இடமாக அந்த பகுதியில் ரோந்து சென்ற நேசமணி இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அவனை பிடித்து விசாரித்தனர். 

 அப்போது அவன் மறைத்து வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகளை காட்டி போலீசாரை மிரட்டினான்.  உடனே போலீசார் அவனை பிடித்து, இரண்டு துப்பாக்கிகள் பதினைந்து தோட்டாக் களை பறிமுதல் செய்து, செந்திலை கைது செய்தனர்.