பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2015

திருவாரூர்: மத்திய பல்கலையின் மேல்கூறை இடிந்து 5 பேர் பல


திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் நாககுடி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் 250 கோடி மதிப்பீட்டில் மத்திய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனாதிபதி பல்கலைக்கழகத்தை திறப்பதாக இருந்தது.  பிறகு கட்டிட பணிகள் சரிவர முடிவடையாததால், ஒத்திவைக்கப்பட்டது. 

 அந்த சமயத்தில் துணைவேந்தரும் ஓய்வு பெற்று விட்டார்.  அதன்பிறகு அந்த பல்கலைக்கழகத்தை யார் நிர்வகிப்பது என்கிற மனநிலை இருந்து வருகிறது.   இந்த கட்டிட பணிகள் தரமற்று இருப்பதாக பொதுமக்களும், கல்வியாளர்களும் போராட்டம் செய்தனர். 

இந்நிலையில் இன்று இக்கட்டிடத்தின் மேல்கூறை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.  மேலும், 18 பேர் படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.