பக்கங்கள்

பக்கங்கள்

30 மார்., 2015

தொடரின் சிறந்த வீரர் மிட்செல் ஸ்டார்க்


லகக் கோப்பைத் தொடரின் சிறந்த வீரராக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த தொடரின் சிறந்த வீரராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பபட்டுள்ளார்.

இந்த தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இவர்தான். தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஸ்டார்க்குக்கு இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விருது வழங்கி கவுரவித்தார்.