பக்கங்கள்

பக்கங்கள்

30 மார்., 2015

இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதி அறிமுகம்!

 இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இந்தியாவுக்கு இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களான எமிரேட்ஸ், லூப்தான்சா, டர்கிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது விமானங்கள் பறக்கும்போது வை-ஃபை இண்டர்நெட் வசதியை வழங்கி வருகின்றன. இந்த வசதியை இந்திய விமானங்களிலும் கொண்டு வர வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், விரைவில் இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை கொண்டு வருவதற்கு அனுமதியளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடைய, விமானத்துறை அமைச்சகமும், விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதி செய்வது குறித்து டெலிகாம் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. எனவே, விரைவில் முறையான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது