பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2015

உலககோப்பையை வென்றது ஆஸ்திரேலியா



உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.  இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.  

5வது முறையாக உலககோப்பையை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. முதன் முறையாக சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்றுள்ளது இந்த அணி.

முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து 45 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 183 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 33.1 ஓவரில்  3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.