பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2015

சங்கக்காரஓகஸ்ட் மாத இறுதியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

 
எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை அணியின் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இதன்படி ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருடன் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வும் முடிவுக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

37 வயதான குமார் சங்கக்கார தற்போது உலகக் கிண்ண தொடரில் விளையாடி வருகின்றார். மேலும் அவர் விளையாடும் கடைசி ஒருநாள் தொடராகவும் இது அமையவுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் ஓய்வு குறித்து சங்கக்கார கருத்து வெளியிட்டுள்ளார்.  சங்கக்காரவின் இவ் அறிவிப்பானது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பல ரசிகர்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூகவலையமைப்புகளின் ஊடாக தங்களது கவலையை வெளியிட்டு வருகின்றனர். மேலும் குறைந்த பட்சம் இன்னும் 2 வருடங்களாவது சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டுமெனவும் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் இலங்கை அணியின் மற்றுமொரு நட்சத்திர வீரரான மஹேலவும் உலகக் கிண்ணத் தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.