பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2015

பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டுவருமாறு நீதிமன்றம் ஆணை


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டுவருமாறு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை கூறியுள்ளார்.
பாரிய நிதி தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்தவுடன், பசில் ராஜபக்ச அமெரிக்கா நோக்கி சென்றார். பாராளுமன்றத்தில் 03 மாத கால விடுமுறை எடுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.