பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2015

மஹிந்த பயன்படுத்தும் மேலதிக அரச சொத்துக்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படும்!- அரசாங்கம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்டு வரும் மேலதிக அரச சொத்துக்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு கிடைக்கக் கூடிய வசதிகள் சலுகைகள் தொடர்பில் உச்ச நீதிமன்றில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பிற்குஅ அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பயன்படுத்தி வரும் மேலதிக அரச சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கான சலுகைகள் குறித்து விதந்துரைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியொருவர் இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள். இரண்டு மோட்டார் கார்கள், மூன்று சாரதிகள், உத்தியோகபூர்வ வீடுகள் மற்றும் எரிபொருள் வசதிகள் வழங்கப்படும்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குண்டு துளைக்காத இரண்டு வாகனங்கள், இரண்டு மோட்டார் கார்கள், ஒரு கெப் வண்டி, எட்டு மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 21 வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றார்.
102 இராணுவத்தினர் உள்ளிட்ட 213 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாகனங்கள் இல்லாத காரணத்தினால் கூட்டங்களை நடத்த முடியாது என மஹிந்த தெரிவித்துள்ளார்.
கூட்டங்களை இடைநிறுத்தாது தொடர்ச்சியாக நடத்துமாறு கோருவதாக அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.