பக்கங்கள்

பக்கங்கள்

13 மார்., 2015

யாழ்ப்பாணத்தில் தரையிறக்கப்பட்ட இரண்டு இந்திய ஹெலிகொப்டர்கள்


இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர்கள் இரண்டு நேற்று மாலை யாழ்ப்பாணம் கோட்டை பிரதேசத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை 04 மணியளவில் குறித்த ஹெலிகொப்டர்கள் நகரத்தை சுற்றி பறந்து கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இலங்கை விமான சேவையின் வரம்பை மீறி யாழ்ப்பாண பிரதேசத்தில் இந்திய விமானங்கள் இரண்டு மூலம் பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்கள் வீசப்பட்டுள்ளது.
அது தொடர்பாக விமான படை ஊடக பேச்சாளர் கிஹான் செனவிரத்ன மேற்கொண்ட விசாரணையில் இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்திட்டத்திற்காக குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நாளை வடக்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில்,வட பகுதிக்கு இந்திய விமானங்கள் மூலமே அவர் பயணிக்கவுள்ளதாக விமான படை ஊடக பேச்சாளர் கிஹான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.